தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.5.11

ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது


பிரஞ்ச் கயானா, மே. தொலை தொடர்புகளுக்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-8 எனும் செயற்கை கோள் இன்று அதிகாலை 2.38 மணியளவில் தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரஞ்ச் கயானாவில் உள்ள கொராருவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
3 ஆயிரத்து 100 கிலோ எடை கொண்ட எரிபொருளுடன்
மொத்தம் 12 டிரான்ஸ் பாண்டர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஜிசாட்-8 செயற்கை கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டவுடன் பெங்களுரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருர்ணன் கூறுகையில், இந்திய செயற்கை கோள் முறையில் இந்த ஜிசாட்-8 செயற்கைகோளில் உயர் அழுத்தமுள்ள 24 டிரான்ஸ்பாண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை செயல்படத்துவங்கின. இவை டி.டி.எச் உள்ளிட்ட டி.வி. ஒளிபரப்புத்துறைக்கும் ரேடியோ போன்றவற்றின் தொலை தொடர்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

0 கருத்துகள்: