இங்கிலாந்தின் சோமெர்செட் அருகே டவுன்டொன் பகுதியில் M5 நெடுஞ்சாலையில், 34 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலி ஆகியுள்ளார்கள்.அஞ்சல் பொதிகள் கொண்டு செல்லும் TNT லாரியுடன் காரொன்று மோதியதை அடுத்து பின்னால் வந்த வாகனங்களும் விபத்தில் சிக்கின.
விபத்து நடந்த இரவு நேரத்தில், அந்த இடத்தில் திடீர் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த ரக்பி கிளப் மைதானமொன்றில், வானவேடிக்கைக்காக பட்டாசுகள் கொளுத்தப்பட்ட கார்னிவேல் நடைபெற்றதால், இப்புகை மூட்டம் ஏற்பட்டு வீதியை மூடியுள்ளது.
விபத்தில் சிக்கிய 34 வாகனங்களில் 6 லாரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகக்து.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக