அக்டோபர் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
பொதுப்பிரிவில் ராணுவத்தில் சேர ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் அக்டோபர் 17 ல் நடைபெறும். ராணுவ தொழிற்நுட்ப பதவிக்கு, பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பதவிக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
அக்டோபர் 18ம் தேதி ஈரோடு, கோவை, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், 19ம் தேதி ராணுவ முகவர்கள் பதவியில் சேர விரும்புபவர்களும் கலந்து கொள்ளலாம். 20ம் தேதி ராணுவ அலுவலர் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பதவிக்கு தேர்வில் கலந்து கொள்ளலாம்.21 மற்றும் 22ம் தேதி மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் நடைபெறும்.
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் தங்களது பள்ளி சான்று, மதிப்பெண் சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று போன்றவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 7 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும், சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக