ஜம்மு, செப். 23- காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் மட்டுமே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும், என்று, ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் கூறியுள்ளார்.
காஷ்மீர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் இஸ்லாமிக் மாநாடு, நியூயார்க்கில் நடந்தது. இதில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்
மிர்வாய்ஸ் உமர் பரூக் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, மிர்வாய்சின் ஹுரியத் மாநாட்டுக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மிர்வாய்ஸ் உமர் பரூக், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானியை, நியூயார்க்கில் சந்தித்ததாகவும், அப்போது, ரப்பானியிடம் மிர்வாய்ஸ், "காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் ஒழிய, தெற்கு ஆசியாவில் அமைதி திரும்பாது. இந்தியா-பாகிஸ்தான் உறவும் மேம்படாது" என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.மேலும், ஜம்மு-காஷ்மீர் நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாகவும், அங்கு மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், ரப்பானி கவலை தெரிவித்ததுடன், ஜம்மு-காஷ்மீர் போராட்டத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து தனது ஆதரவை தெரிவிக்கும் என கூறியதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக