தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.11.11

போலி ரேஷன் கார்டை கண்டுபிடித்தால் ரூ.250; அரிசி கடத்துவதை தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம்: அரசு அறிவிப்பு


தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராமநாதன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 401 போலி ரேஷன் கார்டுகள் களையப்பட்டு, தற்போது 1 கோடியே 97 லட்சத்து 36 ஆயிரத்து 525 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத்
திட்டத்தின் கீழ் மாதந்தோறும் விலையில்லாமல் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரேஷன் அரிசியை சுயலாபத்திற்காக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பக்கத்து மாநிலங்களுக்கு கடத்துகின்றனர்.
ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டால் தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம் ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதுபோல புழக்கத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகள் பற்றி தெரிவிக்கப்படும் தகவல் அடிப்படையில் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தகவல் அளிப்பவர்களுக்கு அளிக்கப்படும் சன்மானம் ரூ.200-ல் இருந்து 250 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: