என்னை ராட்சசன் மகன் என ராம்தேவ் பேசியது உச்சகட்ட அவதூறாகும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
பாபா ராம்தேவையும், அன்னா குழுவினரையும் காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், குளிர் கால கூட்ட தொடர் முடியும் வரை அன்னா ஹசாரே, வாயை
மூடிக்கொண்டு மௌன விரதம் இருந்தால் நல்லது
எனவும், பாபா ராம்தேவ், ஹசாரே வரிசையில் சிறீ சிறீ ரவிசங்கரையும் பாஜக விலைக்கு வாங்கியுள்ளது. அவர் எடியூரப்பாவின் அரசின் ஊழல் பற்றி மூச்சே விடவில்லை என திக் விஜய் சிங் தெரிவித்தார்.மூடிக்கொண்டு மௌன விரதம் இருந்தால் நல்லது
இதற்கு பதில் அளித்துள்ள பாபா ராம் தேவ், திக் விஜய் சிங் ஒரு மனநிலை சரியில்லாதவர். ராட்சசனின் மகன், சாத்தானின் பிள்ளைகள். இவர்களின் கருத்துகளுக்கு நான் ஏதும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள திக் விஜய் சிங், என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், எனது தந்தையை இழிவு படுத்துவதை என்னால் பொறுக்க முடியாது என கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக