அபுதாபி:இந்திய தூதரகத்துடன் இணைந்து அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கான ஆணையகம் இந்தியாவின் தொன்மை வாய்ந்த மற்றும் நவீன நூற்களை அரபி மொழியில் மொழிபெயர்க்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது என்று இந்திய தூதரக அதிகாரி எம்.கே.லோகேஷ்
தெரிவித்துள்ளார். மேலும் இந்த மொழி பெயர்ப்பில் சமஸ்கிருதம் மற்றும் இதர நூற்களையும் மொழிபெயர்க்க அபுதாபி அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த மொழிபெயர்ப்பு திட்டத்திற்கு அபுதாபி கலாசாரம் மற்றும் பண்பாடு ஆணையகத்தைச் சேர்ந்த கலிமா தலைமை வகிப்பார் என்றும் மேலும் இவர் உலகத்தில் உள்ள மற்ற மொழி நூற்களில் சிறந்த நூற்களை அரபியில் மொழிபெயர்க்கும் பிரிவிற்கு பொறுப்பு வகிப்பவர் என்றும் தற்போது பல இந்திய புத்தகங்களை அரபியிலும் மற்றும் அராபிய புத்தகங்களை இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் லோகேஷ் கூறியதாவது “நோபல் பரிசு வென்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் எழுதிய “தி ஆர்குமேண்டேடிவ் இந்தியன்” மற்றும் எம்.ஜே.அக்பர் எழுதிய “தி ஷேட்ஸ் அப் ஸ்வோர்ட்ஸ்:ஜிஹாத் மற்றும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தில் உள்ள முரண்பாடு” மற்றும் “முஷிருல் ஹசன் எழுதியுள்ள “மாடேரெட் ஆர் மிளிடன்ட்: இந்திய முஸ்லிம்களின் பிம்பம்” மற்றும் பவன் கே.வர்மா எழுதிய ” பீஇங் இந்தியன்” மற்றும் ஷஷி தரூர் எழுதிய ” நேரு” ஆகிய நூல்கள் உட்பட இதர நூல்களும் மொழி பெயர்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; ‘இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் அரபி கைப்பிரதிகள் உள்ளது என்றும் அவை இன்னும் பிரசுரிக்கப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். குறைந்தது மூன்று மில்லியனுக்கும் அதிகமான கைப்பிரதிகள் இந்திய நூலகங்களில் உள்ளது என்றும் தற்போது அவை அனைத்தையும் ஆய்வு செய்து பிரசுரிக்க அபுதாபியின் தேசிய ஆய்வு மையம் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
நன்றி; தூது ஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக