ரெயில் கட்டணம் 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:- மத்திய ரெயில்வே கட்டணம் 2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 3 பைசாவும், 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 6 பைசாவும் உயர்த்தப்படும். ஏ.சி. இருக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 10 பைசா உயரும். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 4 பைசா
உயர்கிறது. இதுதவிர நகர்ப்புற ரெயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும்.கடந்த 10 ஆண்டுகளாக ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்போது ரெயில்வே பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு தரம் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரெயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ." இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வரும் 21 ஆம் தேதி முதல் இந்த ரெயில்வே கட்டணம் அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத் தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக