ஹைதராபாத்:வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) எம்.எல்.ஏ அக்பருத்தீன் உவைஸி கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் உவைஸி ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மலுக்கு
கொண்டு செல்லப்பட்டார்.
லண்டனில் இருந்து நேற்று முன் தினம் உவைஸி ஹைதராபாத்திற்கு வந்தார். 42 வயதான அக்பருத்தீன் உவைஸியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர்.
சார்மினார் அருகே பாக்கியலட்சுமி கோயிலை கட்டும் நடவடிக்கையை கண்டித்து உவைஸி ஆற்றிய உரையில் சில உணர்ச்சியை தூண்டும் விமர்சனங்களை வெளியிட்டதாக போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது. ஹைதராபாத் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் அவர் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளது.
சிகிட்சையை சுட்டிக்காட்டி போலீஸில் ஆஜராக உவைஸி நான்கு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். போலீசில் ஆஜராகாததால் நிர்மல் போலீஸின் விசாரணை அதிகாரி எ.ரகு அவரை வீட்டில் சென்று சந்தித்தார். உடல் நலக்குறைவு என்று கூறியதால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். கைதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான எம்.ஐ.எம் தொண்டர்கள் மருத்துவமனையில் திரண்டிருந்தனர். தனக்கு எதிரான வழக்குகளை ரத்துச் செய்யக்கோரி உவைஸி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக