தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.11.11

'டேம் 999' படத்துக்கு தமிழக அரசுதடை


முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற சினிமா படத்தை கேரளாவைச் சேர்ந்த சோஹன்ராய் இயக்கி உள்ளார். 100 ஆண்டுகள் பழமையான இந்த அணையை உடைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்றும் படத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு தமிழகமெங்கும் எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன.படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் வற்புறுத்தி உள்ளனர். மீறி படத்தை திரையிட்டால் தியேட்டர்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
வடபழனியில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் சிலர் புகுந்து அங்கிருந்த படச்சுருளை வெளியே எடுத்து வந்து ரோட்டில் வீசினர். 'டேம் 999' படம் தமிழகமெங்கும் நாளை ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், பி.வி.ஆர்., தேவிபாலா, ஈகா, ஏ.ஜி.எஸ். பேம்நேஷனல், மாயாஜால், பைலட், மோட்சம், மகாராணி, ரோகிணி போன்ற தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் டேம் 999' படத்தை திரைப்பட விநியோகஸ்தர் ஆர்.வி.மகாலிங்கம் வெளியிடுகிறார். இவர் செல்லக்கண்ணு, வாணிமகால் போன்ற படங்களை தயாரித்தவர். இவரது வீடு சாலிகிராமத்தில் உள்ள வேலாயுதம் காலனியில் உள்ளது. 
 
எதிர்ப்பாளர்கள் ஆர்.வி.மகாலிங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து ஆர்.வி. மகாலிங்கம் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 'டேம் 999' படத்தை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர் சங்கம் அறிவித்து உள்ளது.   
 
'டேம் 999' படத்துக்கு தமிழக அரசு இன்று திடீர் என தடை விதித்தது. முல்லை பெரியார் அணை குறித்து பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தும் 'டேம் 999'படத்தை இன்று முதல் தடை செய்வதாக தலைமை செயலாளர் சாரங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: