அமெரிக்கா கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலைநாட்டத் துடிக்கும் ஏவுகணை நடுகை முயற்சி ரஸ்யாவுக்கு பலத்த கிலியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முயற்சிக்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகாமையில் ரஸ்யா தனது ஏவுகணைகளை நடுகை செய்ய விரும்புகிறது என்று டென்மார்க் சர்வதேச விவகார கற்கைப் பிரிவு ஆய்வாளர் ஜாக்கப் மூலர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஏவுகணை சிஸ்டம்
தற்போது ஒரு வலைப்பின்னல் போல ரஸ்யாவை சுற்றி அமைக்கப்பட்டுவிட்டது. கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்திவிட்டு பார்த்தால் அமெரிக்காவின் இரகசியமான நகர்வு ரஸ்யாவை சுற்றி ஏவுகணை மயமாக மாறியிருப்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். நட்பாக பேசிக்கொண்டே அமெரிக்கா அழகான முறையில் ரஸ்யாவை சுற்றி வளைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏவுகணைகளை பொருத்திவிட்டு ஒன்றுடன் ஒன்று நெற்வேர்க்கை ஏற்படுத்தினால் அது ஒரே நொடியில் ரஸ்யாவை சுற்றி ஏவுககனைகள் மாலை போல வந்து விழுந்துவிடும். இவ்வாறு அமெரிக்கா ரஸ்யாவை சுற்றி ஏவுகணைகளால் சர்ப்ப வியூகம் அமைத்துள்ளது ரஸ்யாவுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தான் தேவையற்ற நெருக்குவாரத்திற்குள் இருப்பது போன்ற பிரமையில் இப்போது ரஸ்யா துடிதுடிப்பது நியாயமானது என்றும் சுட்டிக்காட்டினார். சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா ஏவிய ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமுள்ள ஏவுகணை இந்த அச்சத்தின் திரியில் தீயை மூட்டியுள்ளது. அது எப்போது வெடிக்கப்போகிறது என்பதே முக்கிய கேள்வியாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக