புதுடெல்லி:தீவிரவாதம் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலையான சூழலில் இத்தகைய வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஹிந்துத்துவாவினரை கைது செய்யவேண்டும் என ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா(எ.ஐ.எம்.எம்.எம்) கோரிக்கை விடுத்துள்ளது.முஸ்லிம் இளைஞர்களை தவறாக குற்றவாளிகளாக சேர்த்து சிறையில் அடைத்த அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தும் ப்ராவிடண்ட் நிதியிலிருந்தும் தொகையை கைப்பற்றி கைது செய்யப்பட்டு விடுதலையான முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என மஜ்லிஸே முஷாவரா கோரியுள்ளது.
தேசிய புலனாய்வு ஏஜன்சி உருவாக்கப்பட்டதே பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்கு ஆகும். ஆதலால் தீவிரவாதம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கவேண்டும். ஐந்து வருடங்கள் துயரமான சிறை வாழ்க்கைக்கு பிறகு மலேகானைச் சார்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள் விடுதலையான பொழுது இத்தகைய வழக்குகளில் தவறாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் சிறைக்கைதிகள் மீது சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.
பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் உள்ளிட்ட ஹிந்துத்துவாவினரை விரைவில் கைது செய்யவேண்டும் என மஜ்லிஸே முஷாவரா கோரிக்கை விடுத்துள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக