துபாய்:கைதிகளை பரிமாறிக்கொள்வது உள்பட இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.இரு நாடுகளிடையேயான கைதிகள் பரிமாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய ஒப்பந்தங்களில் யு.ஏ.இயின் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஸைஃப் பின் ஸாயித் அல் நஹ்யானும், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கையெழுத்திடுவார்கள் என யு.ஏ.இயில் இந்திய தூதரக அதிகாரி எ.கே.லோகேஷ் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 1200 இந்திய கைதிகள் யு.ஏ.இ சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்கள் மீதமுள்ள காலத்தை இந்திய சிறைகளில் பூர்த்தி செய்யலாம். ஆனால் விசாரணை கைதிகளுக்கு இது பொருந்தாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக