மாஸ்கோ, நவ. 24- ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் புதியதாக பொருளாதார தடை விதித்து இருப்பது ஏற்கமுடியாது என்றும் அது அணுஆயுத பரவல் தடை கொள்கையை கடந்தது என்றும் ரஷ்யா எச்சரித்து உள்ளது.
ஈரானின் வங்கிகள், எண்ணெய் தொழில் ஆகியவற்றை குறிவைத்து சில தடைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் விதித்து உள்ளன. இந்த தடைகளை ஏற்கமுடியாது
என்று ரஷ்ய வெளிநாட்டு அமைச்சரகம் அறிவித்து உள்ளது.ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்காக தான் அணுஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது என்று ஐ.நா.சபையின் கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி கமிஷன் அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து தான் புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக