தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.11

சிரியாவுக்கு ஆதரவாக ரஸ்யா புதிய இராஜதந்திர சிக்கல்

சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டை பதவியிறக்க மேலை நாடுகள் கொண்டுள்ள விருப்பத்திற்கு ரஸ்யா முக்கிய வில்லனாக களமிறங்கும் என்று இன்றைய மேலைத்தேய செய்திகள் தெரிவிக்கின்றன. ரஸ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் புற்றின் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பதவியேற்றால் சிரிய விவகாரத்தில் நேரடியாக தலையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மானிட படுகொலைகளை தொடர்ந்து செய்துவரும் ஒரு சர்வாதிகாரிக்கு
முதல் தடவையாக ஒரு நாடு ஆதரவு கொடுத்துள்ளது என்றால் அது ரஸ்யாதான். ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடைகளை வீட்டோ அதிகாரத்தை பாவித்து தடுத்துள்ளது ரஸ்யா. அத்துடன் நின்றுவிடாது கடந்த சில தினங்களாக சிரியாவுக்கு எதிராக மேலை நாடுகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு எதிரான விமர்சனங்களை ரஸ்யா தெரிவித்து வருவதோடு, மேலை நாடுகளையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது. அத்தோடு ஈரானுக்கு எதிராக வரவுள்ள தடைகளையும் கண்டித்துள்ளது. சோவியத் ரஸ்யா காலத்தில் பெற்ற கொள்கைகளின் அடிப்படையில் மறுபடியும் ரஸ்யா தனது கருத்துக்களை வடிவமைக்க ஆரம்பித்துள்ளது. இப்போதும் வடகொரியா, ஈரான், கியூபா, சிரியா போன்ற நாடுகளுடன் ரஸ்யா ஆழமான உறவைப் பேணி வருகிறது. தேர்தலில் வென்றதும் புதிய பலமான அணியை அமைத்து மறுபடியும் முதன்மை வல்லரசாக ரஸ்யாவை கொண்டுவர புற்றின் முயற்சிப்பார் என்றும் முன்னெதிர்வு கூறப்படுகிறது. ஆனால் மேலைநாடுகளோ பழைய பாணியை கைவிட்டு ரஸ்யாவை தம்முடன் இணைந்து செயற்பட வரும்படி அழைக்கின்றன. இணைவது இலாபகரமான விடயமல்ல என்பதை ஈராக், ஆப்கான் போரில் கண்டுள்ள ரஸ்யா எதிரணியில் நிற்பதே தனது முதன்மைக்கு அவசியம் என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

0 கருத்துகள்: