தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.11

‘டேம் 999′ படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்


டேம் 999 என்ற திரைப்படத்தால் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில மக்களிடையே நிலவி வரும் இணக்கமான சூழல் கெடும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே நாடு முழுவதும் இந்தப் படம் தடை செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான
பிரச்சினை உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் உள்நோக்கத்துடன் சிலர் திட்டமிட்டு டேம் 999 என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படம் திரையிடப்பட்டால், தமிழகம், கேரள மாநில மக்களுக்கிடையே நிலவும் இணக்கமான சூழல் மாறி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
எனவே இந்தப் படத்தை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசும் இந்தப் படத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கருணாநிதி.

0 கருத்துகள்: