மக்களை அச்சுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அப்போது டேம் 999 படம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பழமையான அணை உடைவதாக கூறி மக்களை அச்சுறுத்தும் வகையில் டேம் 999 படம்
எடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்தப் படம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இந்தப் படத்தை எங்களது திரையரங்குகளில் திரையிடுவதில்லை என்ற முடிவினை சம்மேளனம் எடுத்துள்ளது என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக