இஸ்லாமாபாத், நவ. 24- அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக உசேன் ஹக்கானி பணியாற்றி வந்தார். அவர் பாகிஸ்தான் அரசு அனுப்பிய ஒரு முக்கிய தகவலை, அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன் அவர் பாகிஸ்தானுக்கு வரும்படி அழைக்கப்பட்டார்.
இதன்படி இஸ்லாமாபாத் வந்த அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா, ராணுவ தளபதி அஷ்பக் கயானி ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதன்படி இஸ்லாமாபாத் வந்த அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா, ராணுவ தளபதி அஷ்பக் கயானி ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதன் பின் 55 வயதான உசேன் ஹக்கானி தனது விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். அவர் மீது முழு விசாரணை நடைபெறும் என்று பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக