தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.1.13

பால் தக்கரே பிறந்த தினத்தன்று, பெண்களுக்கு கத்தி வழங்கவுள்ள சிவசேனா

கடந்த மாதம் மும்பையில் மறைந்த சிவசேனா கட் சித் தலைவர் பால்தாக்கரேயின் பிறந்த நாளை முன் னிட்டு பெண்களுக்கு கத்தி வழங்கப்படும் என்று சிவ சேனா கட்சி அறிவித்துள்ளது.சிவசேனா கட்சித் த லைவர் பால்தாக்கரேவின் பிறந்தநாள் வரும் ஜனவ ரி 23 ஆம் திகதி வருகிறது. அன்றைய தினம் பெரிய விழா எடுத்துக் கொண்டாட மும்பை தெற்குப்பகுதி சிவசேனா கட்சித் தொண்டர்கள்  திட்டமிட்டு வருகி ன்றனர். மேலும் பால்தாக்கரே பிறந்த நாளை ஒட்டி பெண்களுக்கு பாதுகாப்புக்கு
என்று கத்தி ஒன்றை வழங்கவும் அவர்கள் திட்ட மிட்டுளனர்.

டெல்லி மாணவி மீதான பாலியல் தாக்குதலை தொடர்ந்து பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள, கத்தி விநியோகம் செய்யப்பட உள்ளது என சிவசேனா தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்ரி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. எனவேதான் நாங்கள் பெண்களுக்கு கத்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் விநியோகிக்க உள்ள கத்தி சீனாவில் தயாரிக்கப் பட்டது. அந்த சிறு கத்தியை இரண்டாக மடித்து பெண்கள் தங்கள் பர்சுக்குள்  வைத்துக் கொள்ளலாம்.

ஆபத்து நேரங்களில் பெண்கள் அந்த கத்தியை எடுத்து பயன்படுத்தலாம். பெண்கள் தங்கள் சுய பாதுகாப்புக்காக அந்த கத்தியைப் பயன்படுத்தினால்,அதற்காக வழக்குகளை சந்திக்க நேரிட்டால் அந்த வழக்குகளை அந்த பெண்கள் சந்திக்க சிவசேனா உதவி செய்யும். 29 ஆம் திகதிக்குப பிறகு மராட்டிய மாநிலம் முழுவதும் சிவசேனா இந்த கத்தியை விநியோகம் செய்ய உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: