சிரியாவின் மிக முக்கியமான விமானத் தளங்களில் ஒன்றான இட்லிப் இன்று வெள்ளி போராளிகளின் கரங்களில் விழுந்துள்ளது.கடந்த 22 மாத காலப் போ ரில் சிரிய அதிபர் ஆஸாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரி ய தோல்விகளில் இது முக்கியமானதாகும்.ஏராளம் வெடி மருந்துகள், ஆயுதங்கள், வாகனங்கள் போன் றவற்றையும் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். யொப்காற் அல் நசூரா போராளிகளே இந்த வெற்றி யை பெற்றுள்ளனர் ஏராளம் சிரியப் படைகள் கொல் லப்பட்டு பலர் சரணடைந்து
ள்ளனர்.
அல் நசூரா அமைப்பு மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் உள்ள அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது.
பெருந்தொகையான இராணுவ வாகனங்களையும், வெடிமருந்து களஞ்சியம் ஒன்றையும் கைப்பற்றியதாக போராளிகள் அறிவித்துள்ளனர், இரு தரப்பும் தமது இழப்புக்கள் பற்றிய தகவலை வெளியிடவில்லை.
சண்டை நடக்கும்போதே சுமார் 60 உலங்குவானூர்திகள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாக சிரிய இராணுவம் கூறியுள்ளது.
சிரிய விவகாரத்தில் ஐ.நாவின் தொடர்பாளராக பணியாற்றும் லக்டர் பக்ராமி இன்று வெளியிட்ட கருத்தில் ஆஸாட்டும் அவர் குடும்பத்தினரும் சிரியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்துவிட்டார்கள் இது போதும் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸாட் குடும்பம் சுமார் 40 வருடங்களுக்கு மேல் அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துவிட்டது, ஆஸாட்டின் தந்தை 1970 முதல் 30 வருடங்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
பக்ரமியின் இந்த பேச்சுக் குறித்து சிரிய வெளிநாட்டு அமைச்சு தனது ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளது, முக்கியமான மத்தியஸ்த பாத்திரம் வகிக்கும் ஒருவர் இப்படி பேசலாமா என்றும் கேட்டுள்ளது.
இது சிரிய ஆட்சிக்கும் மக்களுக்கும் எதிரான கருத்து என்றும் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக