இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரந யக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி ம கிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ஷி ராணியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு, ராஜபக்ச கையெழுத்திட்ட அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஷிராணி யின் சட்ட ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார். பி ரதம நீதியரசரை
பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதி பதிக்கு அனுப்பிவைத்தது. இந்த அங்கீகார ஆவணத்தில் இன்று காலை ஜனா திபதி கையெழுத்திட்டுள்ளார்.
பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதி பதிக்கு அனுப்பிவைத்தது. இந்த அங்கீகார ஆவணத்தில் இன்று காலை ஜனா திபதி கையெழுத்திட்டுள்ளார்.
பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது சட்டவிரோதமானது எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிராணிக்கு ஆதரவாக பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளையும் புறக்கணித்து வருகின்றனர். மறுமுனையில் சிறிலங்கா அரச ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து ஷிராணி ஊழல் வாதி என நடத்தப்படும் போராட்டங்களே ஊடகங்களில் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக