ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் தனது கைவ ரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது, நேற்று சனி இர வு முதல் மதியம்வரை பிரான்சிய விமானங்கள் நடா த்திய தாக்குதலில் தீவிரவாதிகளும், மாலிப்படைக ளுமாக மொத்தம் 100 பேர்வரை மரணித்துள்ளனர்.இ ந்தத் தாக்குதலில் பிரான்சிய உலங்குவானூர்தி தா க்கதல் பிரிவு போலீசார் ஒருவரும் மரணமடைந்து ள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலியின் மத்திய நகரமான கொனாவை அல்காய்தா
போரா ளிகள் கைப்பற்றியிருந்தனர், அதே நகரத்தில்தான் நேற்று பிரான்சிய விமான த் தாக்குதல்கள் முனைப்பாக நடந்துள்ளன.
போரா ளிகள் கைப்பற்றியிருந்தனர், அதே நகரத்தில்தான் நேற்று பிரான்சிய விமான த் தாக்குதல்கள் முனைப்பாக நடந்துள்ளன.
பயங்கரவாதிகளை முற்றாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மாலி நாட்டின் அரசுடன் இணைந்து பிரான்சிய படைகள் முன்னெடுக்கும் என்று பிரான்சிய அதிபர் ஒலந் நேற்று தெரிவித்துள்ளார்.
மாலிக்கு புறப்படுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் பிரான்சிய தரைப்படையினர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலை நாடுகள் மத்திய கிழக்கை முடித்து ஆபிரிக்க சருகுகளை மூட்டி வெளிச்சம் பெற இருப்பது போல ஆபிரிக்காவிற்குள் பிரான்சின் நுழைவு இருக்கிறது.
அதேவேளை பிரான்ஸ்சிய படைகள் சோமாலியாவிற்குள் பணயக்கைதி மீட்பு நடவடிக்கைக்காக பிரவேசித்த முயற்சி தோல்வியடைந்து, ஒரு பிரான்சிய படைவீரர் கொல்லப்பட்டு இன்னொருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தத் தாக்குதலில் சுமார் 19 பேர் மரணமடைந்ததாக நேற்றைய செய்திகள் தெரிவித்திருந்தன.
கடத்தி வைக்கப்பட்டுள்ள பிரான்சிய உளவாளி என்னவானார் என்று தெரியவில்லை.
மறுபுறம் பிரான்சில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக இன்று பாரிய ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது.
எட்டு கிறீத்தவ பிஷப்கள் பங்கேற்கிறார்கள், பிரபல அரசியல் தலைவர் ஜீன் பிரான்கோஸ் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.
பிரான்சிய அரசு ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி, ஓரின தம்பதிகள் பிள்ளைகளை தத்தெடுக்கவும் வழி செய்யும் சட்டத்தை அமல் செய்ய இருக்கும் செய்தியறிந்து இந்த ஆர்பாட்டம் இன்று ஞாயிறு பிரான்சிய வீதிகளை ஊடறுத்துப் பாயவுள்ளது.
இந்த வாரம் பிரான்ஸ் உலக அரசியல் அரங்கில் முக்கிய நகர்வுகளை முடுக்கிவிட்டுள்ளது, பிரான்சிய முன்னாள் அதிபர் ஸார்கோஸி தலைமையில் மேலை நாடுகளின் தலைவர்கள் பாPசில் நடாத்திய முக்கிய மாநாட்டின் அதிர்வுகளே இந்த வாரம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளன.
இனி நடைபெறப் போகும் போர்களில் மேலை நாடுகளின் அணிக்கு பிரான்சே தலைமை தாங்கப்போகிறது என்று லிபிய தாக்குதலுக்கு முன்னர் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஆபிரிக்க நாடுகளில் அடுத்த கட்ட போர்கள் வெடிக்கப் போகிறது என்பதையோ, ஆபிரிக்காவில் காலனித்துவம் செலுத்தியுள்ள பிரான்ஸ் அதற்கு தலைமை தாங்கப் போகிறது என்பதையோ அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
ஆனால் அந்த மாபெரும் இரகசிய கூட்டத்தின் நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன…
அமெரிக்க ட்றோனார் விமானங்களை ஆபிரிக்காவிற்குள் நகர்த்த வேண்டுமென நேற்று முன் தினம் ஐ.நா செயலர் கேட்டிருந்தார்.
நேற்று அமெரிக்கா பிரான்சிற்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தது, அதேவேளை ஸார்கோஸியின் தலைமையில் அந்தப் பணிகளை அமெரிக்கா முன்னெடுக்க விரும்பவில்லை, காரணம் ஸார்கோஸி ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் கொண்ட நல்லுறவு அதற்கு தடையாக இருந்தது.
ஆனால் மேர்க்கலுடன் பிரான்சிய ஒலந்திற்கு இடைவெளி இருப்பதால் அமெரிக்க ஆதரவை பிரான்ஸ் பெற வழியிருக்கிறது.
ஆனால் ஒரு விடயம் தெரிகிறது.. உலகப் பயங்கரவாதத்தை அடக்கப் புறப்பட்டுள்ள பிரான்ஸ் தனது மடியில் பயங்கரவாதத்தை இனி சுமக்க விரும்பாது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக