விஸ்வரூபம் படத்தை வெளியிடும் முன் எங்களுக் கும் காண்பிக்க வேண்டும் என்று 'தமிழ்நாடு இஸ் லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு' கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித் து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .மு ஹம்மது ஹனீபா வெளியிட்டுள்ள கோரிக்கையில்: அண்மையில் வெளியான " துப்பாக்கித் " திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படு த்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ் லிம்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய
மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய
காட்சிகளையும் நீக்கியதாகக் கூறப் படுகிறது.
இந்த நிலையில், கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள,"விஸ்வரூபம்' படம், இம்மாதம், 11ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக, டி.டி.எச்., வசதி மூலம், "டிவி'யில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இத்திரைப் படமும் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாக இருக்கக் கூடும் என்ற சர்ச்சையை இத்திரைப் படத்த்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கும் போது தெரிகிறது.
மேலும், " துப்பாக்கி " ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன் "விஸ்வரூபம் " வெளிவரும் சூழல் உள்ளது. மென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவானதமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம்.
எனவே . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார் .
அவரது முந்தைய சில படங்களிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் எங்களது ஐயம் மேலும் வலுப்பெறுகின்றது . மேலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு முறைகளில் திரு.கமல்ஹாசன் அவர்களிடம் தங்கள் ஐயத்தை எடுத்துச் சென்ற பின்பும் திரு. கமல்ஹாசன் அவர்கள் சமுதாயத்தின் அச்சத்தை போக்க எவ்விதத்திலும் முன்வரவில்லை .
மேலும் முஸ்லிம்களைக் குறித்து படமே எடுக்கக் கூடாது என்பதல்ல எங்களின் நிலைப்பாடு . முஸ்லிம்களின் வாழ்வியலைப் படமாக்குவதில் தவறில்லை . இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் , அவர்களின் , கல்வி பொருளாதார நிலை எனப் பதிவிற்காக எவ்வளவோ விஷயங்கள் இருக்க , தொடர்ந்து அவர்கள் தேச துரோகிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குரியது .
எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைத் தமிழகத் திரையுலகினர் மேற்கொள்ளாதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் . கற்பனைச் செய்திகளுக்கு திரைத்துறையினர் பலியாகிவிடக்கூடாது . அவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்துகிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கையில் தெரியப் படுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக