பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு ஒன்றில் அசாம் காங்கிரஸ் தலைவர் பிக்ராம் சிங் கைது செய்யப்பட் டுள்ளார்.அசாமின் சிராங் மாவட்டத்தின் சாந்திப்பு ரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 2 ம ணியளவில் பெண் ஒருவரின் வீடு புகுந்து அவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ள பிக்ராம் சிங் பிர ம்மா முயற்சித்ததாகவும் எனினும் அப்பெண் சத்தம் போட்டு அழைப்பு விடுத்ததை அடுத்து அக்கம் பக்கத் திலிருப்பவர்கள் உஷாராகி
விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடு த்து அக்கிராம வாசிகள் ஒன்றிணைந்து பிக்ரம்சிங் பிரம்மாவின் ஆடைகளை கலைந்து அவமரியாதை செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பெண் இரு பிள்ளைகளின் தாயாவார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிக்ரம் சிங் பிரம்மா மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனத்தை வெளியிட்டுள்ள அசாம் முதல்வர் தருன் கோகய், குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அவர் காங்கிரஸ் காரராக இருந்தாலும் இல்லாவிடினும் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
அசாமின் பக்சா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சேர்மெனும், போடோலேண்ட் கவுன்சிலின் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளருமாக பிக்ராம் சிங் பிரம்மா பதவி வகித்து வருகிறார்.
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து வரும் இது போன்ற சம்பவங்கள் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக