தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.13

கூகோ ஸாவேஸ் ஆபத்தான நிலையில் தலைவர்கள் படையெடுப்பு


வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக் கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந் துள்ளது.தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவா னாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது.மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே புற்று நோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும்,
புற்றுநோயின் பாதிப்புடன் மார்புச்சளி, கா ய்ச்சல், மூச்சுவிட இயலாத நிலையில் மேலும் பல சிக்கல்களை அவருடைய உடல் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.
58 வயதான ஸாவாஸ் பெரும் எண்ணெய் வளமுள்ள வெனிசியூலா நாட்டின் அதிபராக இருந்துகொண்டு அதி தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இருந்துள்ளார்.
யாசர் அரபாத்திற்கு இஸ்ரேலியர்கள் பொலோனியம் விஷம் வைத்து கொன்றார்களா என்ற சந்தேகத்தில் அவருடைய உடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது, அதுபோல தனது புற்றுநோய்க்கும் அமெரிக்காவே காரணமென ஸாவாஸ் பல தடவைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இப்போது வெனிசியூலா நாட்டின் முக்கிய தலைவர்கள் கியூபாவிற்கு பறப்பெடுத்து அவருடைய வைத்தியசாலையை சுற்றியபடி நிற்கிறார்கள்.
வெனிசியூலா உப அதிபர் நிக்கொலாஸ் மடுறோ, நீதியமைச்சர் சில்வா புளோறிஸ், ஆய்வுத்துறை அமைச்சர் யோர்ஜ் கரியாசா, அதிபரின் மருமகன் உட்பட முக்கிய தலைவர்கள் அங்கு போயுள்ளமை நிலமையின் பாரதூரத்தன்மையை விளக்குவதாக இருக்கிறது.
கூகோ ஸாவாஸ் மரணமடைந்தால் அவருக்கு பின் ஆட்சிக்கு வருவது யார்.. அவருடைய ஆபத்தான உடல் நிலையைவிட வெனிசியூலா நாட்டின் அரசியல் உடல் நிலை ஆபத்தாக இருக்கிறது.
இது இவ்விதமிருக்க இரத்தக்கட்டி அடைத்த காரணத்தால் பாதிப்படைந்து மூளை உதறலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெளியேறிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் அடுத்த வாரம் பணிகளின் நிமிர்த்தம் காரியாலயம் வருகிறார்.
அவர் தனது பதவியை யோன் கார்ரியிடம் ஒப்படைக்க காரியாலயம் வரவேண்டியது அவசியமாகும்.

0 கருத்துகள்: