ஆப்கானிஸ்தானின் சமாதான திட்டங்களில் இந்தி யாவும் பங்கேற்க வேண்டும் ஈரான் கோரியுள்ளது.இ து குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சயிட் ஜலிலி கருத்துரைக்கையில் இந்தியாவும் ஆப் கானுக்கு அண்மையில் உள்ள ஏனைய நாடுகளும் இ ணைந்து ஆப்கானில் சமாதானம் மற்றும் ஸ்திரத் த ன்மை ஏற்பட பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள் ளார்.சயீட் ஜலிலி இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் துடன் பேச்சுவார்த்தை
நடத்திய பின் ஊடகங்களுக் குப் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கை யில் ஆப்கானுக்கு அண்மையில் உள்ள சக்தி வாய்ந்த நாடுகளான இந்தியா வும், பாகிஸ்தானும் இணைந்து செயற்பட்டால் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதுடன் இலகுவான அரசியல் தீர்வும் எட்டப்படலாம். கடந்த 10 வருட ங்களாக அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள் ஆப்கானை மையம் கொண்டு தீவிரவாதத்தை நிர்மூலமாக்கப் பாடுபட்டன. ஆனால் தோல்வியையே சந்தித் துள்ளன.

எனினும் இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அப்போது வடக்கே குடியிருந்த எதிரணியினருடன் உடன்பாட்டைக் கொண்டிருந்தனர். எனவே தான் அங்கு சமாதான முயற்சிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பங்களிப்புத் தேவையனது என கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரசன்னம் ஆப்கான் விடயத்தில் அதிகம் தேவை என ஈரான் இப்போது வலியுறுத்திவருகின்ற போதும் ஈரானின் உள்நாட்டு விடயத்தில் அது அக்கறை கொள்ளவில்லை. ஈரான் தனது அணுச்சக்தி ஆற்றலை வளர்க்க தொடங்கியதால் தான் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்திருந்ததாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தலிபான்களின் தாக்குதல்களை குறைப்பதற்காக பாகிஸ்தான் அரசு அவர்களுக்கு சார்பாக கடும் குற்றங்களை செய்த முக்கிய தலிபான் தலைவர்களை அண்மையில் விடுதலை செய்திருந்ததுடன், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானியர்கள் தமது எதிர்காலத்தை எந்த ஒரு அந்நிய சக்தியின் தலையீடும் இல்லாது தீர்மானிக்கவே விரும்புவதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக