தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.13

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிளவை ஏற்படுத்த முயற்சி - தெலியாகொன்ன விகாராதிபதி

முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மிக அந்நி யோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லி ம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் விசமத்தனமா ன பிரசாரங்களைச் செய்து ஒரு பிளவை உண்டு ப ண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றன. இது நாட்டி ன் நலனுக்கும் பௌத்த சமயத்தின் நற்பெயருக்கும் பொருத்தமானதல்ல என தெலியாகொன்ன எஹிப ஸ்ஸிகே பௌத்த விஹாரையின் விகாராதிபதி வ ண.கித்துல்பே அரியதம்ம ஹிமி
தெரிவித்தார். குருநாகல் மாநகர சபை உறுப் பினர் அப்துல் சத்தார் மற்றும் பஹகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத் தில் முஹம்மதிய்யாவினால் குருநாகல் இந்துகல்கொட கந்த பிரதேசத்தில் மண் சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இந்துல்கொட சத்தாமோதய விஹாரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், பௌத்த சமயம், இந்து சமயம், இஸ்லாமிய மார்க்கம் எல்லாம் நல்ல விடயங்களையே போதிக்கின்றன. இவ்வறான நல்ல காரியங்களை நாங்கள் ஒன்று சேர்ந்து செய்யும் போது எங்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படும். இரு தரப்பினரிடையே நிலவும் தப்பான அபிப்பிராயங்கள். சந்தேகங்கள் தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்றார். உலருணவு வழங்கி வைக்கும் நிகழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபையின் உறுப்பினருமான அப்துல் சத்தார் உரையாற்றுகையில், ஹலால் சான்றிதழ் அத்தாட்சி தொடர்பான சர்ச்சை முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது எழுந்துள்ளது. இது சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரம். இதன் பணம் வெளிநாட்டிலுள்ள அல் கைதா அமைப்புக்கு வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இது பெரியதொரு அபாண்டமான குற்றச் சாட்டு. குருநாகல் மாவட்டத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் தொன்று தொட்டு மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த யுத்த காலத்திலும் கூட எந்தவிதமான பிணக்குகளுமின்றி இம்மூவின மக்களும் பரஸ்பரம் புரிந்துணர்வு நல்லெண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் யாவரும் இந்த நாட்டின் தாய் மண்ணை நேசிப்பவர்கள். இலங்கை முஸ்லிம்கள் வர்த்தக ரீதியாக வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சில ஆண்கள் இங்குள்ள சிங்களத் தாய்மார்களை திருமணம் செய்ததால் உருவானர்கள். இதற்கான வரலாறுகள், சான்றுகள் உள்ளன. இந்த பூமி எங்களுடையது. நீங்கள் தாக்கினால் நாங்கள் பாக்கிஸ்தானுக்கோ. பங்களா தேசத்திற்கோ செல்ல முடியாது. எங்கள் உயிர் இந்த மண்ணிலேதான் போக வேண்டும். இவ்வாறான அனர்த்தங்கள் நிகழும் போது நாங்கள் இனவேறு பாடு பார்ப்பதில்லை. சுனாமிக்காக நாங்கள் எல்லோரும் சேர்ந்து மனிதாபிமான உதவிகளைச் செய்தோம்.அதே போன்று இந்தப் பிரதேசத்திற்கு எங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளோம் என்றார்.

0 கருத்துகள்: