தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.8.11

பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

லண்டன், ஆக. 5-   இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூ கிரீன் (40). இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது தெரிய வந்தது.

அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்


Worlds-Most-Expensive-House-Antilia
மும்பை:ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம்

படிப்பதற்கு அமெரிக்கா லாயக்கில்லை: மூத்த விஞ்ஞானி


கல்வி கற்பதற்கு அமெரிக்கா உகந்த இடமில்லை என்று மூத்த இந்திய விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கத் தான் விரும்புகின்றனர். இந்நிலையில் கல்வி கற்பதற்கு அமெரி்ககா சிறந்த இடமில்லை என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி. என். ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராவ் பேசியதாவது,

மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்


imagesCACUIQZ5
மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விசாரணை நடத்திவரும் இவ்வழக்கில் இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

4.8.11

மகாத்மா காந்தி கொலை:ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வக்காலத்து வாங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி – காங்கிரஸ் கண்டனம்


93_ktthomas
புதுடெல்லி:இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியை கொலைச்செய்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் குற்றவாளி அல்ல என முன்னாள் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரலாற்று உண்மைகளை மறைத்து கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கையை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கண்டித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள

சிரியா மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தீவிரப்படுத்தியது


002-0731162132-European-Union
டமாஸ்கஸ்:மக்கள் எழுச்சி போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் பஸ்ஸாருல் ஆஸாத் அரசின் ராணுவ நடவடிக்கைகளை  தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் சிரியா அரசு மீதான தடையை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத், பாதுகாப்பு அமைச்சர் அலி ஹபீப் ஆகியோர் மீது ஐரோப்பியன் யூனியன் ஏற்கனவே தடை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்


அறுபது வயது பெண்ணுக்கு, பழனி, பாலாஜி மருத்துவமனையில், செயற்கை முறை கருத்தரித்தல் மூலம், ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியைச் சேர்ந்த ரிங்கேஸ்வரனுக்கு, 66 வயதாகிறது. இவரது மனைவி சரஸ்வதிக்கு, 60 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி, 40 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பழனி, டி.எஸ்.மருத்துவமனையில் இயங்கி வரும், பாலாஜி செயற்கை முறை கருத்தரித்தல் (டெஸ்ட் டியூப் பேபி) மையத்தில், கடந்த ஆண்டு சரஸ்வதி சிகிச்சைக்கு சேர்ந்தார். சிகிச்சை வெற்றியடைந்ததால், சரஸ்வதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருமணம் செய்து, 40 வருடங்களுக்குப் பிறகு

ஈராக்கில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு மரண தண்டனை

பாக்தாத், ஆக. 4-  ஈராக்கில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில், பாதிரியார் மற்றும் பொது மக்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து

முபாரக் மீதான வழக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம்


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்(83) மீதான வழக்குகளின் விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது. அவர் மீது ஊழல், அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலை செய்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முபாரக் மட்டுமன்றி அவரது மகன்களான அலா, ஜமால், எகிப்தின் முன்னாள் உட்துறை அமைச்சரான ஹபிப் அல்-அடி மற்றும் அவரது 6 உதவியாளர்களின் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணையும் தற்போது நடைபெற்று வருகின்றது.
முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள்

3.8.11

முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரை:சுப்ரமணிய சுவாமியின் மீது வழக்கு தொடர சிறுபான்மை கமிஷன் முடிவு


subramaniyaswamy
புதுடெல்லி:கடுமையான வகுப்புவாத வெறியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டுரை எழுதிய சுப்ரமணியசுவாமி மீது வழக்கு தொடர தேசிய சிறுபான்மை கமிஷன் முடிவுச்செய்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.என்.எ பத்திரிகையில் சுப்ரமணிய சுவாமி முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்பட கடுமையான வகுப்புவாத விஷக்கருத்துக்களை

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு


தங்கள் நாட்டில் முடக்கப்பட்ட லிபியா அதிபர் கடாபியின் சொத்துகளை லிபிய போராட்டக்காரர்களுக்கு அளிக்கப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி கடாபிக்கு சொந்தமான சுமார் 25.90 கோடி டாலர் தொகையை, லிபிய போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் அளிக்க உள்ளது. போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சில் இந்த நிதியை உணவு,

ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!


கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தமிழக தவ்ஹீது ஜமாத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நேற்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்


israel_gaza_mourners_Militants-Killed-airstrike
ராமல்லா:ஆக்கிரமிப்பு மேற்குகரையில் அகதி முகாமில் இரண்டு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. 23 வயது மற்றும் 25 வயதுடைய இளைஞர்களின் தலையிலும், அடிவயிறிலும் குண்டு பாய்ந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.

முன்னாள் எகிப்திய நிதியமைச்சருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை


77917004-exegyptian-finance
கெய்ரோ:எகிப்தின் முன்னாள் நிதியமைச்சர் யூசுஃப் புத்ரோஸ் காலிக்கு ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆனால் கலியை இதுவரை கைதுச்செய்ய முடியாததால் அவர் ஆஜர்படுத்தப்படாமலேயே நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.
தலைமறைவாக இருப்பதால் யூசுஃப் புத்ரோஸ் காலிக்கு மேல்முறையீடு செய்யவியலாது. அதேவேளையில் காலியின் குடியுரிமை குறித்து பிரச்சனைகள் இருப்பதாக எகிப்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2.8.11

விசாரணை பூர்த்தியான பிறகே வஸ்தன்வி வெளியேற்றப்பட்டார்-தேவ்பந்த்



Darul-230211-ra1
முஸஃபர்நகர்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை புகழ்ந்து பேட்டியளித்ததாக கூறப்படும் தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் குலாம் முஹம்மது வஸ்தன்வியை விசாரணை பூர்த்தியான பிறகே நீக்கியதாக தேவ்பந்த் தாருல் உலூம் தெரிவித்துள்ளது.
வஸ்தன்விக்கு எதிராக குற்றச்சாட்டுகளையெல்லாம் விசாரணைச் செய்த அறிக்கையை மஜ்லிஸே ஷூரா விவாதித்தபிறகே அவரை வெளியேற்றியது

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் வருகிறது!


மும்பை: ""மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி அசோக் சிங்கால் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, "மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

காந்தி சிலையை உடைத்த சம்பவம்:ஹிந்துத்துவ தீவிரவாதிகள் கைது


கோயம்புத்தூர்:ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை உடைத்த சம்பவத்தில் ஹிந்துத்துவ  அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன்(வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ்(வயது 47) ஆகியோரை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் கைதுச் செய்தது.
பாபா ராம்தேவை கைதுச் செய்த சம்பவத்தை கண்டித்து காந்திசிலையை உடைத்ததாக சிலையை உடைத்த பிறகு குற்றவாளிகள் சம்பவ இடத்தில் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

போரில் அப்பாவி தமிழ்மக்களை கொன்றது உண்மைதான் !இலங்கை

கொழும்பு, ஆக.2- இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவிமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல்முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்.

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் பலி

லண்டன், ஆக. 2-   12 மணி நேரம் இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் பலியானார்.
 
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கிறிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோகேம் விளையாடுவதில் இவருக்கு அலாதி பிரியம். அதில் ஈடுபட்டால் தன்னையே மறந்து விடுவார். நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விளையாடுவார். அது போன்று சமீபத்தில் வெளியான மராத்தான் விளையாட்டு சம்பந்தப்பட்ட வீடியோகேம்

துபாயில் அர‌பிய‌ரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி

துபாய்: துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் (ஈமான்) வ‌ருட‌ந்தோறும் த‌மிழ‌க‌ பார‌ம்ப‌ர்ய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.

இத‌ை த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி வ‌ட இந்திய‌ர்க‌ள், அரேபிய‌ர், ஆப்பிரிக்க‌ர், ப‌ங்களாதேஷ், பாகிஸ்தான், சீன‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் இன‌, ம‌த‌ வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர்.