லிபிய அதிபர் கடாபியைக் கொல்லும் நோக்கம் நேட்டோ படைகளுக்கு உள்ளது என்றும், கடந்த மாதமே நேட்டோ படைகள் அவரை கொல்ல முயற்சி மேற்கொண்டதாக அமெரிக்க கடற்படை அட்மிரல் சாமுவேல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த மாதம் கடாபியின் மாளிகைகள் தாக்கப்பட்டது அவரைக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று உறுதியாகியுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபி ஆதரவுப் படைகளுக்கும், கிளர்சியாளர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக அதிபர் கடாபியின் மாளிகைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் கடாபியின் மாளிகை ஒன்றின் மீது, நேட்டோப் படைகள் நடத்திய தாக்குதலில் கடாபியின் மகனும், பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில், அதிபர் கடாபியைக் கொல்லும் எண்ணம் நேட்டோப் படைகளுக்கு உள்ளது என்றும், கடந்த மாதமே அவரை கொல்வதற்கு நேட்டோப் படைகள் தாக்குதல் நடத்தின என்றும் அமெரிக்கக் கடற்படையின் அட்மிரல் சாமுவேல் கூறியதாக செய்திகள் வெளியாகின. எனினும், இதனை அட்மிரல் சாமுவேல் தரப்பு மறுத்துள்ளது. அட்மிரல் சாமுவேல், இத்தாலியில் இருக்கும் அமெரிக்கக் கூட்டுப்படைகளின் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக