தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.11

போராட்டத்தில் கலந்துக்கொள்ள ராம்தேவிற்கு ஹசாரே நிபந்தனை


வலுவான லோக்பால் மசோதாவிற்காக காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் அன்னா ஹசாரே துவக்க உள்ளார்.
இந்நிலையில் ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார்.ஏற்கனவே சர்ச்சைக்குரிய நபராக திகழும் ராம்தேவ் தனது போராட்டத்தில் கலந்துக்கொள்வதால் சிக்கல்கள் உருவாகி தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என கருதிய ஹசாரே, ராம்தேவ் தனது போராட்டத்திலிருந்து கலந்துக்கொள்ளாமல் கழற்றிவிடுவதற்காக தான் நிபந்தனைகளை கடைப்பிடித்தால் போராட்டத்தில் பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.ஆனால்,
அந்த நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
ராம்தேவும், அன்னா ஹஸாரேவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் முகமூடிகள் என காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை எதிர்கொள்ள ஹசாரே ராம்தேவுடன் சற்று இடைவெளியை பேணுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பூரண ஆதரவைப்பெற்ற ஹசாரேயும், ராம்தேவும் முன்னர் ஒன்றாக போராட்டத்தில் களமிறங்கினர்.
லோக்பால் மசோதாவிற்காக ஜந்தமந்தரில் ஹஸாரே உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியபொழுது ராம்தேவும், ஆதரவாளர்களும் உடனிருந்தனர். ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் நடத்திய ஹைடெக் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஹஸாரே ஆதரவு தெரிவித்திருந்தார். போலீஸ் நடவடிக்கையின் மூலம் ராம்தேவை போலீஸ் ஹரித்துவாருக்கு அழைத்துச்சென்றபோது ஹசாரே அதனை கண்டித்து ராஜ்காட்டில் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டார். இதன்மூலம் ஹசாரேயும், ராம்தேவும் ஹிந்துத்துவத்தின் முகமூடிகள் என்ற வலுவான குற்றச்சாட்டை காங்கிரஸ் எழுப்பியது.
காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டிற்கு எதிராக காங்.தலைவி சோனியாவுக்கு கடிதம் எழுதிய ஹசாரே பின்னர் ராம்தேவுடன் இடைவெளியை பேணிவருகிறார். ராம்தேவிற்கு போராட்டம் நடத்த தெரியவில்லை எனவும், யோகா தவிர வேறொன்றும் அவருக்கு தெரியாது எனவும் ஹசாரே ராம்தேவை குற்றம் சாட்டினார்.
உண்ணாவிரத நாடகத்தின் இறுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு திரும்பிய ராம்தேவ், ஹசாரேயின் போராட்டத்தில் கலந்துகொள்வீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
News@thoothu

0 கருத்துகள்: