
மேலும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ரவுடிகளை கண்காணிக்கவும் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில் மாநகர பகுதிகளில்
போலீஸ் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கட்ட பஞ்சாயத்து பேச வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பட்டியலை போலீஸ் உயர் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதன்பேரில் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருபவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர்.
ஆளும் கட்சி பிரமுகர்கள் பெயரும் இதில் இடம் பெறுகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கட்ட பஞ்சாயத்து பேசுவோர் குறித்து உடனடியாக உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,''கட்டப் பஞ்சாயத்து அரசியல் பிரமுகர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. கட்டப்பஞ்சாயத்து பேசும் நபர் ஆளும் கட்சியாக இருந்தாலும் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக