திரிபோலி லிபியாவில் பதவி விலக மறுக்கும் கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் ஈடுபட்டுள்ளது. திரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்தின் மீது நேட்டோ ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தியது.
இந்த மாளிகை கடாபியின் வீடு மட்டும் அல்ல, இது ராணுவம் மற்றும் உளவு
படையின் தலைமையகமாகவும், ராணுவத் தளமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த மாளிகைக்குள் கடாபியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு என்று தனியான வீடுகளும் இருக்கின்றன. இந்த வீடுகள் மீது நேட்டோ ராணுவம் குண்டுகளை வீசியது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளுக்குள் இருந்தவர்கள் என்ன கதி ஆனார்கள் என்பது தெரியவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக