இலவச அரிசி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார் . அவரைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
அரிசி பெறத் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அ.தி.மு.க
. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே இலவச அரிசித் திட்டத்துக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.
. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே இலவச அரிசித் திட்டத்துக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்துக்கான
உத்தரவினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.ஏற்பாடுகள் தீவிரம்: இலவச அரிசித் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று புதன்கிழமைதொடங்கி
வைத்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். ரேஷன் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திட்டத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் ஜெயலலிதா, ஏழு பயனாளிகளுக்கு இலவச ரேஷன் அரிசி பையை வழங்குவார் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதா உருவம் பதித்த பையில் அரிசி வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள் எனத் தெரிகிறது.
இரண்டு திட்டங்களின் கீழ் அரிசி: தமிழகத்தில் அரிசி பெறத் தகுதியுடைய 1 கோடியே 83 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.
இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படுகிறது.
செலவு எவ்வளவு? தி.மு.க. அரசில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டது. இலவச அரிசித் திட்டத்துக்காக ஆண்டுக்கு மேலும் ரூ. 400 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எந்த நாளிலும் பெறலாம்: இலவச அரிசி திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொலைபேசி எண்ணில் (044-28592828) தெரிவிக்கலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாவட்டவாரியாக குறைதீர்ப்புப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். இந்த இலவச அரிசித் திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் எந்த நாளிலும் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக