தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.6.11

தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்


திரிபோலி, ஜூன்.1- லிபியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை கடாபியின் சார்பில் பிரதமர் பாக்தாதி அல் முக்மூதி விமான நிலையம் சென்று வரவேற்றார். பிறகு அவர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்துக்கு சென்றார். அங்கு அவர் கடாபியை சந்தித்து பேசினார்.
உடனடியாக போர் நிறுத்தம் செய்வது,
மனிதாபினமான உதவிகளை அதிகரிப்பது, மோதல்களுக்கு காரணமான இருக்கும் பிரச்சினைகளை களையும் வகையில் அரசியல் சீர்திருத்தம் கொண்டு வருவது ஆகியவற்றை விரைந்து செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஜூமா நடத்தினார். கடாபி பதவி விலகுவதற்கான வழிவகைகளை ஜூமா மேற்கொள்வார் என்பது தவறான பிரசாரம் என்றும் லிபியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கிளர்ச்சிக்கார தலைவர் ஒருவர் கூறுகையில், கடாபி ராணுவத்தின் 4 தளபதிகள் உள்ளிட்ட 8 மூத்த அதிகாரிகள் ராணுவத்தை விட்டு விலகி எதிர்ப்பாளர்கள் பக்கம் வந்து விட்டனர் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: