தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.6.11

ஒரே மாதத்தில் 3 கிரகணம்


ஒரு மாதத்தில் 3 கிர கணங்கள் ஏற்பட்டு வானி லை ஆய்வாளர்களுக்கு புது மகிழ்ச்சியை ஏற்படுத்து கிறது. ஜூன் 1ம் தேதியன்று பகுதி அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும். இந்த சூரிய கிரகணம் இந்தியப் பகுதியில் தெரியாது. சைபீ ரியா வடக்கு சீனா, அலாஸ்கா, நோவ ஸ்காட்டியா போன்ற நாடுகளில் இந்த பகுதி அளவு சூரிய கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம். இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி அதிகாலை 0.55 மணிக்கு சூரிய கிரகணம் துவங்குகிறது.
இதையடுத்து ஜூன் 15ம் தேதி சந்திரகிரகணம் ஏற் படுகிறது. இதனை இந்தியா வில் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தி யப் பிராந்தியத்தில் இருந்து மத்திய கிழக்கு,
கிழக்கு ஆப் பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடு களில் காணலாம். சந்திரகிர கண நாளான ஜூன் 15 தேதி இரவு 11.52 மணிக்கு சந்தி ரனை பூமியின் நிழல் முழு மையாக மறைத்து, அடர்ந்த இருட்டை ஏற்படுத்துகி றது. இந்த கிரகணம் ஜூன் 16ம் தேதி அதிகாலை 2.32 மணி வரை நீடிக்கிறது.
அதிசய மாதத்தின் 3வது கிரகணமான பகுதி அளவி லான சூரிய கிரகணம் ஜூலை 1ம் தேதி ஏற்படுகி றது. இதனை இந்தியாவில் காண முடியாது. இந்த ஆண்டில் இரு முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 2வது முழு சந்திர கிரகணம் டிசம்பர் 10ம் தேதியன்று ஏற்படுகிறது. இந்த ஆண் டில் கடந்த ஜனவரி 4ம் தேதி பகுதி அளவு சந்திர கிரக ணம் ஏற்பட்டது

0 கருத்துகள்: