தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.11

முபாரக் மீதான வழக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம்


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்(83) மீதான வழக்குகளின் விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது. அவர் மீது ஊழல், அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலை செய்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முபாரக் மட்டுமன்றி அவரது மகன்களான அலா, ஜமால், எகிப்தின் முன்னாள் உட்துறை அமைச்சரான ஹபிப் அல்-அடி மற்றும் அவரது 6 உதவியாளர்களின் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணையும் தற்போது நடைபெற்று வருகின்றது.
முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகடமியிலேயே இவ் விசாரணை நடைபெற்று வருகின்றது. எகிப்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த முபாரக் கடந்த பெப்ரவரி மாதம் மக்கள் நடத்திய போராட்டத்தினைத் தொடர்ந்து பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: