தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.5.11

அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்!!

திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். இவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்.

பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது

தலிபான் தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டாரா?


காபூல், மே.23- ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக்காட்சி தெரிவித்தது. எனினும் அவர் எப்படி, யாரால் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை.
இதனிடையே முல்லா ஓமர் கொல்லப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவல் சரியானதுதான் என்றார் அவர். எனினும் முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவலை

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது


சமாதான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் இயக்கத்தை சேர்க்க இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும்,அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகு ஒபாமாவை சந்தித்து பேசிய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

ஹமாஸும், பத்தாஹும் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள

கனிமொழியை பார்க்க இன்று டெல்லி செல்கிறார் கருணாநிதி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழியைப் பார்க்க திமுக தலைவர் கருணாநிதிஇன்று டெல்லி விரைகிறார்.
கனிமொழி கைது செய்யப்பட்டது முதல் அதிர்ச்சியில் இருக்கிறார் கருணாநிதி. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உங்களது மகள் இப்படி ஒரு வழக்கில், செய்யாத குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அதேபோலத்தான் நானும் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.

தாக்குதலைத் தொடர்ந்தால் பதிலடி பாகிஸ்தான் எச்சரிக்கை


தங்கள் நாட்டில் இதற்குமேலும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை‌ச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து

தமிழகத்தில் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாகும் காங்.,


சோனியாவும், பிரதமரும், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், தி.மு.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், “நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும்’ என, ஜெயலலிதா கூறிய நாள் முதல், காங்கிரஸ் மீது, தி.மு.க.,வுக்கு இருந்த அதிருப்தி அதிகமாகியது.

22.5.11

ஊழல் விசாரணைப் பட்டியலில் அடுத்து; அமைச்சர் தயாநிதி மாறன்..?


ஊழல் விவகாரங்களில் தொடரப்பட்டு வரும் விசாரணைகளில், தமிழகத்திலிருந்து அடுத்து விசாரணைக்கு அழைக்கப்படும் பிரமுகராக, தயாநிதிமாறன் இருக்கலாம் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் கசிந்திருப்பதாகத்
தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல்விவகாரத்தை துருவி ஆராய்ந்து வரும் சிபிஐ, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும், பூர்வாங்க விசாரணைகளைத்  நடத்தி வருகிறது.

தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் பதவி ஏற்றார்


14 வது சட்டசபையின் முதல் கூட்டம், வரும் 23ம் தேதி (திங்கள்கிழமை) கூடு கிறது. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்காலிக சபாநாயகருக்கு ஞாயிறன்று (மே 22), கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ராஜ்பவனில் காலை 9 மணிக்கு நடக்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.தற்காலிக சபாநாயகர், 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் புதிய உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வரும் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.

திராவிட சிந்தனையாளர் சின்னகுத்தூசி மறைவு!!

திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார் திரு.சின்னகுத்தூசி.

அவர்22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். 

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில்!! இந்தியாவுக்கு தகுதி உண்டா!!

நியூயார்க் : ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலுக்கு, இந்தியா உட்பட, 14 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

"கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை' என, ஐ.நா., செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.

கடந்த, 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில், 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது.

எளிமையாக நடக்கிறது பூட்டான் மன்னர் திருமணம்


 பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்து முடிந்து.
ஜூலையில் மொனாகோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இந்தாண்டில், மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தவுள்ளார் பூட்டான் நாட்டு மன்னர். வரும் அக்டோபர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரை கரம் பிடிக்கிறார்.

காங்கிரசுடன் உறவு தொடருமா!! செயற்குழுவில் முடிவு!!

* மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? உங்கள் கருத்து என்ன? 

அது நீதிமன்ற விவகாரம், நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

* காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது? 

எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.(கடுப்பான முறையில் பதில் இருந்தது ).

ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது


பிரஞ்ச் கயானா, மே. தொலை தொடர்புகளுக்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-8 எனும் செயற்கை கோள் இன்று அதிகாலை 2.38 மணியளவில் தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரஞ்ச் கயானாவில் உள்ள கொராருவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
3 ஆயிரத்து 100 கிலோ எடை கொண்ட எரிபொருளுடன்

பாகிஸ்தானில் பெட்ரோல் லாரிகள் குண்டுவீசி தகர்ப்பு; 16 பேர் பலி


இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' படை வாகனங்களுக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.  

அதுபோன்று பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரிகள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாண்டி கோடல்

இலங்கை விடயத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பனியுத்தம்!

துப்பாக்கியுடன் சிறிலங்காவுக்குள் நுழைய முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் வந்த போதே இரண்டு அமெரிக்கப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவில் இருந்தே

21.5.11

அமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்!!

 நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.

அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

சட்டசபைக்கு வர மாட்டார் கருணாநிதி?


தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்களில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று பேச்சு அடிபடுகிறது.

1991ல் திமுகவுக்கு மிகப் பெரிய தேர்தல் அடி விழுந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் கருணாநிதி,இன்னொருவர் பரிதி இளம்வழுதி.

அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது… எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !  அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

பிசாசு ஆட்சி போய் பேயாட்சி வந்திருக்கிறது!
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. அஸ்ஸாமில்

இந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை!!

 தமிழ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்தது தமிழ் நாட்டில் ஹிந்துத்துவா அரசியல் என்பது வெறும் கனவே என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

25 காசுக்கு டாட்டா பை பை!!

 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.