திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். இவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்.
பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது
இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக நின்று முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தார்..
திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு, பாத்திமா கனி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 3 மகன்களும் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திருச்சியில் ஒரு திரையரங்கும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவதா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
இவரது விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அமைச்சருக்கு எஸ் கார்ட் போலீஸ்கள் இருந்தும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் எப்படி? தப்பி ஓடி இருக்க முடியும். பல கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக