தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல்விவகாரத்தை துருவி ஆராய்ந்து வரும் சிபிஐ, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும், பூர்வாங்க விசாரணைகளைத் நடத்தி வருகிறது.
22.5.11
ஊழல் விசாரணைப் பட்டியலில் அடுத்து; அமைச்சர் தயாநிதி மாறன்..?
தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் பதவி ஏற்றார்
14 வது சட்டசபையின் முதல் கூட்டம், வரும் 23ம் தேதி (திங்கள்கிழமை) கூடு கிறது. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்காலிக சபாநாயகருக்கு ஞாயிறன்று (மே 22), கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ராஜ்பவனில் காலை 9 மணிக்கு நடக்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.தற்காலிக சபாநாயகர், 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் புதிய உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வரும் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
திராவிட சிந்தனையாளர் சின்னகுத்தூசி மறைவு!!
திராவிட இயக்கதின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர், நாத்திகச் செம்மல் பத்திரிக்கை ஜாம்பவான் எழுத்துலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார் திரு.சின்னகுத்தூசி.அவர்22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில்!! இந்தியாவுக்கு தகுதி உண்டா!!
நியூயார்க் : ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலுக்கு, இந்தியா உட்பட, 14 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன."கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை' என, ஐ.நா., செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.
கடந்த, 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில், 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:54 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
ஐ.நா,
மனித உரிமைகள் கவுன்சில்
காங்கிரசுடன் உறவு தொடருமா!! செயற்குழுவில் முடிவு!!
* மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? உங்கள் கருத்து என்ன? அது நீதிமன்ற விவகாரம், நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.
* காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?
எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.(கடுப்பான முறையில் பதில் இருந்தது ).
ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது
பிரஞ்ச் கயானா, மே. தொலை தொடர்புகளுக்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-8 எனும் செயற்கை கோள் இன்று அதிகாலை 2.38 மணியளவில் தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரஞ்ச் கயானாவில் உள்ள கொராருவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
3 ஆயிரத்து 100 கிலோ எடை கொண்ட எரிபொருளுடன்
இலங்கை விடயத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பனியுத்தம்!
துப்பாக்கியுடன் சிறிலங்காவுக்குள் நுழைய முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் வந்த போதே இரண்டு அமெரிக்கப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவில் இருந்தே
21.5.11
அமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்!!
நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.
அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
சட்டசபைக்கு வர மாட்டார் கருணாநிதி?
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்களில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று பேச்சு அடிபடுகிறது.
1991ல் திமுகவுக்கு மிகப் பெரிய தேர்தல் அடி விழுந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் கருணாநிதி,இன்னொருவர் பரிதி இளம்வழுதி.
இந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை!!
தமிழ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்தது தமிழ் நாட்டில் ஹிந்துத்துவா அரசியல் என்பது வெறும் கனவே என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
25 காசுக்கு டாட்டா பை பை!!
25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.
20.5.11
படையப்பா........ படுத்திரியப்பா!!!!
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.
ஜாமீன் தள்ளுபடி; கனிமொழி கைது !
புதுடெல்லி, மே.20- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்கிறது.
அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
6:07 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2ஜி ஸ்பெக்ட்ரம்,
கலைஞர் டிவி,
கனிமொழி
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நெறியாளர் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 20.05.2011 அன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் முகம்மது நஜீப் தொடங்கி வைக்கிறார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு,
கோலாலம்பூர்
மின்வெட்டைத் தீர்ப்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது நாளாக ஆலோசனை
அமைச்சர்கள் பொறுப்பேற்ற இரண்டாவது நாளில், அவரவர் துறை சார்ந்த இடங்களில் நேரடி களஆய்வு நடத்தினர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சமூக நலத் துறை அமைச்சர் உட்பட பலரும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு புதன்கிழமை சென்று ஆய்வு நடத்தினர்.
இதன்பின், மாலையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் வரை கூட்டம் நடைபெற்றது.
உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியின் படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உளவுத்துறை உண்மை தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்தது தான் முக்கிய காரணம்’ என்று தி.மு.க.,வினரே புலம்பி வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சியை பிடித்தபோது, மத்திய மண்டல ஐ.ஜி.,யாக ஜாபர்சேட் பணியாற்றி வந்தார். அவருடைய பணியைக் கண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஜாபர்சேட்டுக்கு உளவுத்துறை ஐ.ஜி., பதவி வழங்கினார். இதையடுத்து சென்னை சென்று பொறுப்பேற்ற அவர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







