தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தை மாற்றக் கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசால் அனைவரும் வியக்கும்
வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது. இதனை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்பு 18.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது என்று வாதிட்டார். இதுதொடர்பாக அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று நீதிபத்கள் கேள்வி எழுப்பினர்.
அதுகுறித்து தகவல் எதுவும் இல்லை என்றும், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் அவ்வாறு செய்திகள் வருவதாகவும் மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய உத்தரவின்பேரில் இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது என்பது தெரிய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார்.
இந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரை நீக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே அரசு தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் மாற்றம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், மனுதாரர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக