தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.5.11

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது


 இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நெறியாளர் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 20.05.2011  அன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் முகம்மது நஜீப் தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் அரேபியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள், அமைச்சர்கள், ஆய்வாளர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் அப்துல் ரகுமான், எஸ்.எம்.இதயத்துல்லா ஆகியோர் தலைமையில் 70 பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் 20 தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடக்க உள்ளன. புத்தக வெளியீடுகளும் நடைபெறுகிறது. தமிழ் மொழி இலக்கியம், இஸ்லாம் தமிழ் இலக்கியம், மொழி இலக்கணம் ஆகியவை சார்ந்த ஆய்வுகள் இடம் பெறகின்றன. தமிழகத்தை சேர்ந்த 12 அறிஞர்கள் ஆய்வுத்தாள்களை சமர்ப்பிக்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: