தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.8.12

நோர்வே தாக்குதல் கொலையாளி ஆனர்பிகார்ஸ் பிறீவிக்கிற்கு 21 வருட சிறைத்தண்டனை


நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் உட்டோயா தீவு தாக்குதல் கொலையாளி ஆண்டெர்ஸ் பிரேய்விக் கிற்கு 21 வருட கால சிறைத்தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், மருத்துவ பராமரிப்பின் கீழ் தடுத்து வைக்குமாறு த ண்டனை வழங்கப்படவிருந்தது. எனினும் அவர் ந ல்ல அறிவாற்றலுடன் (Sane) இருப்பதாக மருத்துவ
பரிசோதனை ஆதாரங்கள்நிரூபித்துள்ளதால் அவருக்கு 21 வருட சிறைத்த ண்டனை வழங்கப்படுவதாக இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டுவந்த ஐந்து நீதிபதிகள் தமது தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

மேலும் 21 வருடங்களுக்கு பிறகும் அவர் சமூகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடியவராக இணங்காணப்பட்டால் இத்தண்டனைக்காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த போது பிரேய்விக் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது  வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் மனநல மருத்துவர்கள் குழு ஒன்றை பரிந்துரைத்து பிரேய்விக்கை ஆராயுமாறு பணித்தது. முதலாவது மருத்துவ குழு, பிரேய்விக் சித்தப்பிரமை (Paranoid Schizophrenic) பிடித்தவர் எனக்கூறி  தனது அறிக்கையை சமர்ப்பித்த போதும் மறுபடியும் ஆய்வுகளை மேற்கொண்ட இரண்டாவது மருத்துவ குழு பிரேய்விக் நல்ல அறிவாற்றலுடன் இருப்பதாக பரிந்துரை செய்தது.

இன்று தீர்ப்பு வெளியாக முன்னர் பிரேய்விக் கருத்து தெரிவிக்கையில், தான் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்படுவது, மரண தண்டனையிலும் பார்க்க மோசமானது என கூறியிருந்தார்.

தற்போது தீர்ப்பு வெளியானதை அடுத்து, சந்தர்ப்பம் இருந்தும் இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்ய போவதில்லை என பிரேய்விக் கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம், காவற்துறையினரின் போலியான சீருடை அணிந்து நோர்வேயின் உட்டோயா தீவில் பிரேய்விக் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். ஒஸ்லோவில் அவர் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்தே பிரேய்விக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதேவேளை இன்று தீர்ப்பு வெளியாகிய போது நீதிமன்றத்தில் தடுப்புக்கண்ணாடி சுவர்களுக்கு வெளிப்புறமாக பிரேய்விக்கின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வழகின் தீர்ப்பை நேரடியாக கேட்டுக்கொண்டிருந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்ட போது பிரேய்விக் புன்னகையுடன் அதை கேட்டு தலை அசைத்தது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்: