தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.8.12

வெனிசுலாவில் பிரதான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 19 பேர் பலி


இன்று சனிக்கிழமை தென் அமெரிக்க நாடான வெ னிசுலாவின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்ததில் 19 பேர் பலியானதுடன் 53 பேர் காயமுற்றுள்ளனர்.அ முவே பிளான்ட் எனப்படும் இந்நிலையம் வெனிசு லாவின் வடமேற்கே உள்ள ஃபல்கொன் மாநிலத்தி ல் அமைந்துள்ளது.இம்மாநில கவர்னர் ஸ்டெல்லா லூகோ ஊடகங்களுக்குப் பதிலுரைக்கையில் இந்த எண்ணெய் நிலையத்தின் அருகிலுள்ள வீடுகள் சில வும்
தீ வெடிப்பினால் சேதமடைந்திருப்பதாக கூறினார். மேலும் தற்போது தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் இவர் கூறினார். உலகின் மிகப் பெரிய எண்ணெய் உலைகளில் ஒன்றான அமுவே ஒரு நாளைக்கு 645 000 பரெல்கள் உற்பத்தி செய்து வருகின்றது.

லூகோ மேலும் கூறுகையில் இவ்வுலையில் மேலதிக வெடிப்பு அபாயம் எதுவுமில்லை என்றார். தீ விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. இறந்தவர்களில் ஒருவன் 10 வயதுச் சிறுவன் எனவும் கூறப்படுகின்றது.

பொருளாதார நிபுணர்கள் கூற்றுப்படி வெனிசுலாவில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களே தென் அமெரிக்காவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் ஆகும். ஆனால் பல வருடங்களாக மின்சாரக் கோளாறுகள், விபத்துக்கள் என்பவற்றை இந்நிலையங்கள் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: