தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.13

யுத்த சூழ்நிலை : ஒரு மில்லியன் சிரிய அகதிகளுக்கு உணவு கொண்டு செல்வதில் சிக்கல்


சிரியாவில் பட்டினியால் வாடும் ஒரு மில்லியன் அ கதிகளுக்கு தம்மால் உணவு கொண்டு சென்று கொ டுக்க முடியாதவாறு பாதைகள் தடைபட்டிருப்பதாக உலக உணவு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. உலக உணவு அமைப்பான WFP இது குறித்து தெரிவி க்கையில் சுமார் 1.5 மில்லியன் சிரிய அகதிகளுக்குத் தன்னால் உதவி செய்ய முடியும் என்ற போதும் இ டைவிடாத சண்டையும் டார்ட்டுஸ் துறைமுகத்தை பாவிக்க முடியாத சூழ்நிலையும் இணைந்து பல்லா யிரக் கணக்கான மக்களுக்கு உணவு உதவி சென்று சேர்வதற்கானnவழியை அடைத்துள்ளதாகவும் இத னால் அவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கியிரு

ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2011 மார்ச் மாதம் தொடர்ந்து  22 மாதங்களாக முற்றியுள்ள சிரிய வன்முறையினால் இதுவரை 60 000 பேர் வரை கொல்லப் பட்டிருப்பதாக ஐ.நா கணிப்பிட்டுள்ளது. மேலும் கடும் முயற்சிக்குப் பின்னர் இப்போதுதான் சிரிய கிளர்ச்சிப் படை வடக்கு சிரியாவின் ஸ்வாத்தெஸ் உட்பட சில பாகங்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் மிகப் பயங்கரமான சூழ்நிலை நிலவுவதால் சிரியாவின் முக்கிய பாகங்களான ஹோம்ஸ்,அலெப்போ,டார்ட்டுஸ் மற்றும் கமிஸ்லி ஆகியவற்றில் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து தமது ஊழியர்களை WFP மீள அழைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் 2012 ஆம் ஆண்டு WFP ஊழியர்கள் மீதும் வாகனங்கள் மீதும் அரச படைகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதை விட பிரயாணங்களை மேற்கொள்ள எரிபொருள் இல்லாத தன்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் மட்டும் சுமார் 1 இலட்சம் சிரிய அகதிகள் என்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். சிரியாவின் உள்ளேயும் அதன் அயல் நாடுகளிலும் சுமார் 4 மில்லியன் பேருக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது.

இதேவேளை சிரிய கிளர்ச்சிப் படை தலைநகர் டமஸ்கஸ் உட்பட முக்கிய பகுதிகளைக் கைப்பற்ற முயன்றால் அரச படைகளின் மூலம் மிகக் கொடூரமான வான்வெளித் தாக்குதலை எதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலின் புலனாய்வு சிரிய அரச படைகள் மக்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி உயிரைப் பறிக்கவல்லக் இரசாயனம் அடங்கிய 500 பவுண்ட்ஸ் எடையுடைய குண்டுகளை விமானங்கள் மூலம் மக்கள் செறிந்த பகுதிகளில் வீசுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சிரிய அதிபர் அசாத் ஏற்கனவே தன் சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்கள் பாவிப்பது தொடர்பாக மேற்குலக நாடுகளின் கடும் கண்டனத்தைச் சம்பாதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: