தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.13

கர்நாடகா துணை முதல்வர் ஈஸ்வரப்பா லோகாயுக்தா போலீஸ் முன்பு ஆஜர்!


லோகாயுக்தா நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாட க துணைமுதல்வர் ஈஸ்வரப்பா, தனது மகன் மற்று ம் மருமகளுடன் லோகாயுக்தா போலீஸ் முன்பு நே ற்று ஆஜரானார்கள்.வருவாய்க்கு அதிகமாக சொத் து சேர்த்த விவகாரத்தில்,  கர்நாடக துணை முதல்வ ர் எடியூரப்பா, மற்றும் மகன் கந்தேஷ், மருமகள் ஷா லினி ஆகியோர் மீது லோகாயுக்தா நீதி மன்றத்தில் வினோத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு ப் பதிவானது.லோகாயுக்தா நீதி மன்றம் இந்த வழக் கை விசாரிக்க லோகாயுக்தா
காவல்துறைக்கு உத்த விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஈஸ்வரப்பா வீட்டில் போலீசார் சோ தனை நடத்தினர். இதுத் தொடர்பாக ஈஸ்வரப்பா எந்த நேரமும் கைதாகலாம் என்று செய்தி பரவிய நிலையில், லோகாயுக்தா நீதி மன்றம் எடியூரப்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

அதன்படி ஈஸ்வரப்பா தொடர்ந்து 10 நாட்களுக்கு லோகயுக்தா நீதி மன்றத்தில் மகன், மற்றும் மருமகளுடன் கையெழுத்து போடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் படி மூவரும் வந்து கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துகள்: