நேற்று மறுபடியும் ஊடகங்களில் பேசிய சிரிய சர் வாதிகாரியான ஆஸாட் ஏறத்தாழ முன்னாள் சிறீல ங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனே யூலைக்கல வரம் நடந்த இரவு பேசும்போது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று பேசியது போல மடைத்தனமான உரையொன்றை நிகழ்த்தியு ள்ளார்.இவ்வளவு நடந்த பிறகும் போராளிகள் ஆயுத ங்களை போட்டால் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் என்று கூறிய அவர் ஒன்றுபட்ட சிரியாவிற்கு தானே தொடர்ந்தும் வழமைபோல
தலைவராக தொடர்வேன் என்ற சாத்தியமற்ற கற் பனையில் பேசியுள்ளதாக நோக்கர்கள் குறை கூறியுள்ளார்கள்.
தற்போது சிரியாவில் போராடுவோர் வெளிநாடுகளை பின்னணியாகக் கொண்டவர்கள், அல்குவைடா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்திய ஆஸாட் தானே நடுநாயகமானவன் என்ற நிலையை இத்தருணத்திலும் மாற்றவில்லை.
ஆயுதங்களை கைவிட்டால் ஒரு மேலான ஆயத்தை அமைத்து, புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி, ஜனநாயக ரீதியான தேர்தலை நடாத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
குரங்கு அப்பம் நிறுத்த கதைபோல நாடகமாடியுள்ள இவரை உண்மைகளை மறைத்து நாடகமாடும் ஒரு வேடதாரி என்று பிரிட்டன் கண்டித்துள்ளது.
நான் அதிபராக வந்தால் பராக் ஒபாமாவுக்கு உப அதிபர் பதவி வழங்குவேன் என்று 2004ம் ஆண்டு கிளரி கிளின்டன் கூறியது போன்ற உரையை ஆஸாட் வழங்கியுள்ளார்.
தேவையற்ற பேச்சுக்களை பேசி காலத்தைக் கடத்தாமல் உடனடியாக பதவியை விட்டு ஆஸாட் வெளியேற வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் கத்தரினா அஸ்ற்கொன் கேட்டுள்ளார்.
டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டால் கூறும்போது ஆஸாட் பதவியை விட்டு விலகி அதை வெற்றிடமாக்கி புதியவர்கள் வர இடம்விட வேண்டும் என்று கூறினார்.
போராளிகள் தரப்பும் ஆஸாட்டின் உரை கேலிக்கிடமானது என்று புறந்தள்ளியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக