தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.1.13

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ - 100 பேர் மாயம்


அவுஸ்திரேலியாவின் டஸ்மானியா தீவுகளில் கட ந்த  வெள்ளிக்கிழமை தொடக்கம் பரவியுள்ள காட்டு த்தீயினால் 100க்குமேற்பட்டோர் காணாமல் போயி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இக்காட்டு த்தீ மற்றும் கடும் வெயில் காரணமாக அப்பகுதியில் வெப்ப நிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிக மாக திகழ்கின்றது.அவுஸ்திரேலியாவின் அனர்த்த வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக இ து பதிவு
செய்யப்பட்டுள்ளது.மேலும் இக்காட்டுத் தீ யினால் டஸ்மானியாவின் 50 ஆயிரம் ஏக்கர் வனப் பகுதியும் பண்ணைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதன் மூலம் டஸ்மானியாத் தீவுகளில் உள்ள 100 இற்கும் அதிகமான வீடுகள் அழிக்கப் பட்டதுடன் சேதமடைந்த வீடுகளுக்கு ள்ளே இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையி னரும் போலிசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரக் காட்டுத் தீ அனர்த்தத்தின் தீவிரத்தையும் முர்டுன்னா எனும் நகரை அது அழிப்பதையும் அவுஸ்திரேலியாவின் செவென் நெட்வர்க் நேரடியாக ஒளிபரப்பியது. மேலும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் சம்பவ இடத்துக்கு நேற்று திங்கட்கிழமை நேரடியாகச் சென்று அதிகாரிகளையும் பாதிக்கப் பட்ட மக்களையும் பார்வையிட்டார். இந்நிலையில் தெற்கேயுள்ள நியூ சவுத் வேல்ஸின் வக்கா வக்கா நகருக்குக் காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாதவாறு பரவி வருவதாகவும் 12 மைல் தூரத்துக்கு இது தொடர்ச்சியாக எரிந்து வருவதால் வரலாற்றில் இதுவரை இல்லாதளவு தீயை அணைக்க வீரர்கள் கடும் பிரேயத்தனத்துடன் போராடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: