தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.13

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் சாவு

அமெரிக்காவின் புளோரிடா விமானத்தில் தரையி றங்க முயன்ற சிறிய விமானம், வீட்டின் மீது விழு  ந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர். பீச்கிராப்ட் எச்35 என்ற அந்த சிறு விமானம் போர்ட் பியர்சில் இ ருந்து நோக்ஸ்வில்லே பகுதிக்குச் சென்றது. புறப்ப ட்ட சிறிது நேரத்தில் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட து. என்ஜின் குலுங்குவதாகவும், தீப்பற்றுவதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தெரிவித்தார். அதே சமயம் மோசமான வானிலையும் நிலவியது. இந்நி லையில், பைலட் எச்சரித்த
சில நிமிடங்களில் அந்த விமானம் பிளாக்லர் கவுண்டி விமான நிலையத்தின் கிழக்கில் உள்ள ஒரு வீட்டின்
மீது மோதி தீப்பிடித்தது. இதில் வீடும் தீப்பிடித்து எரிந்தது.

விமானத்தில் இருந்த 3 பேர் பலியானார்கள். வீட்டு உரிமையாளர் சூசன் கிராக்கட் வெளியில் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

0 கருத்துகள்: