தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.13

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் : நால்வர் பலி

அமெரிக்காவின் கொலொராடோ மாநிலத்தில் இன் று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால் வர் பலியாகியுள்ளனர்.கடந்த வருடம் துப்பாக்கிச்சூ ட்டு சம்பவம் நடந்த ஔராரா சினி திரையரங்கிற்கு அருகிலேயே தற்போதைய சம்பவமும் நடந்துள்ள து.வீடொன்றில் நடந்த இத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியானதை அடுத்து தப்பிக்க முனைந்த துப்பாக்கி தாரி மீது காவல்துறையினர் பதில்
துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.மேலும் ஒருவர் அவ்வீட்டிலிருந்து அதிஷ் டவசமாக தப்பியுள்ளார்.

கடந்த 2012 ஜூலை மாதம் ஔராரா சினி திரையரங்கில் பேட்மேன் திரைப்படத்தை பார்க்க வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி தாரி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 58 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம கனெக்டிக்கட்டின் சிறுவர் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 20 பள்ளிக்குழந்தைகள் பலியானதுடன், ஆறு ஆசிரியர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதையடுத்து அமெரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்றைய துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

0 கருத்துகள்: