தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.1.13

பாலஸ்தீனம் தனிநாடு கடவுச்சீட்டு அடையாள அட்டை ரெடி


பாலஸ்தீனம் ஐ.நாவில் வெறும் பார்வையாளர் அந் தஸ்த்து பெற்றால் அதனால் என்ன பயன் என்று சப் பைக்கட்டு கட்டியவர்களுக்கு இப்போது பாலஸ்தீன த்தில் நடக்கும் சம்பவங்கள் முதுகுத்தோல் உரித்து துடிக்கத் துடிக்க உப்புத்தடவ ஆரம்பித்துள்ளன.பால ஸ்தீனம் இனி தனிநாடு என்று பிரகடனம் செய்த அ திபர் முகமட் அபாஸ் அந்த நாட்டின் குடிமக்களுக்கு பாலஸ்தீன கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவைகளை வழங்க ஆரம்பி க்கும்படி பணித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் விமான நிலையங்கள் பாலஸ்தீன தனியரசின் கடவுச்சீட்டுக்களை முறைப்படி ஏற்க வேண்டிய நிலை இப்போது உருவாகியுள்ளது.
ஒரு தனிநாடு என்னென்ன காரியங்களை செய்ய வேண்டுமோ அத்தனை காரியங்களையும் பாலஸ்தீனம் செய்ய அடியெடுத்து வைத்திருப்பது நாடற்ற இனங்களுக்கு புது நம்பிக்கை தரும் நிகழ்வாகும்.
அதேவேளை அமெரிக்க அதிபர் தனது புதிய பாதுகாப்பு அமைச்சராக றிப்பப்ளிக்கன் செனட்டர் சவுக்கேகலை நியமித்துள்ளார்.
தமது கட்சியல்லாதவரும் தம்மை கடுமையாக விமர்சனம் செய்தவருமான சவுக்கேகலை பாதுகாப்பு அமைச்சராக்குவதில் முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
அடுத்து நடக்கவுள்ள இஸ்ரேலிய – ஈரான் நடவடிக்கைகளை றிப்பப்ளிக்கன் விமர்சனம் செய்யாமல் வாய் மூடியிருக்க இந்த நியமனம் உதவும்.
அதைவிட முக்கியம் இவர் இஸ்ரேல் ஆதரவாளர் அல்ல, மேலும் ஈரான் விடயத்திலும் போர் அவசியமற்றது பேசித் தீர்க்கலாம் என்ற கொள்கையுடையவராகும்.
பராக் ஒபாமாவின் அடுத்த வெளிநாட்டுக் கொள்கைகள் எப்படி அமையப் போகிறது என்பதற்கு இவருடைய நியமனமே நல்ல உதாரணமாகும்.
இது இவ்விதமிருக்க சமீபத்தில் தனிநாடாக பிரகடனம் செய்த கொசோவாவிற்குள் அதன் எதிர் நாடான சேர்பியாவின் அதிபர் வரக்கூடாது என்று கொசோவா உப அதிபர் கைர்டீன் குசி தெரிவித்துள்ளார்.
சேர்பிய அதிபர் ரொமிஸ்லேவ் நிக்கொலக் தமது நாடு வந்து, அங்குள்ள சேர்பிய சிறுபான்மை மக்களை பார்வையிட விரும்பினால் அதேபோல சேர்பியாவில் உள்ள சிறுபான்மை அல்பேனிய இனத்தவரை தான் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆக சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை மழுங்கடிக்க முயலும் கல்லுளி மங்கர்களுக்கு இதுபோல துன்பங்கள் தொடரும் என்று மேற்கண்ட இரு நிகழ்வுகளும் திடமாக எடுத்துரைக்கின்றன.
இதுபோல வரும் மார்ச் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமை மாநாடு, அதற்காக வெளிவரவுள்ள சனல் 4 புதிய ஆவணப்படம் போன்றன சிறீலங்கா இனவாத அரசை சிப்பிலிக்கூத்தாட வைக்கப்போவதையும் உணர முடிகிறது.

0 கருத்துகள்: